Monday, June 4, 2012

An interview about SUGA Consulting Services in Tamil....




An interview about SUGA Consulting Services in Tamil....

1. உங்கள் நிறுவனத்தில் என்ன செய்து வருகிறீர்கள்?

சுகா கன்சல்டன்சி சர்விசெஸ் (SUGA Consulting Services)


எங்கள் நிறுவனம் சாப்ட்வேர்  கன்சல்டன்சி (Software Consultancy) மற்றும் பிசினஸ்  கன்சல்டன்சி (Business Consultancy) என்று சொல்லப்படும் வியாபார ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி வருகிறோம். 


2. நீங்கள் என்ன விதமான வியாபார ஆலோசனைகள் வழங்கி வருகிறீர்கள்?


இன்று இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில் தொழில், வியாபாரம் செய்வதில் பலவித் சவால்கள் உள்ளன.  


ஒரு தொழிலதிபர் தொழில் செய்யும்போது பலவித் இன்னல்கள், இடர்ப்பாடுகள், தடைகள் வரும். அவற்றை எதிர் கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லி கொடுக்கிறோம். 


இன்று (Tuesday, June 05, 2012) தமிழ்நாட்டில் மின்வெட்டு மிக அதிக அளவில் இருக்கிறது. இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  தொழிலாளர்களின் உற்பத்தி திறனை முழுமையாக பயன் படுத்த முடியவில்லை. இது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது, எப்படி எதிர்கொள்வது, எப்படி வெற்றி காண்பது போன்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.


இன்று இந்தியாவில் அரசு அலுவலகங்களில் பல மாநில அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற லஞ்சம் வாங்கும் அரசு சூழ்நிலையில் வியாபார வெற்றி என்பது மாபெரும் சாதனைதான்.  இந்தப் பிரச்சனைகளை எப்படி வெற்றி காண்பது என்று சொல்லித் தருகிறோம்.

இன்று நேர்மையான அரசியல்வாதிகளை பார்ப்பது மிகவும் அரிய செயலாக உள்ளது.

மகாத்மா காந்தி போன்ற மாமனிதர்கள் மீண்டும் அரசியலுக்கு எப்போது வருவார்கள் என இந்தியா ஏங்குகிறது .
இது போன்ற ஊழல் அரசியல் சூழ்நிலையில் வியாபார வெற்றி அடைவது எப்படி? தொழில் வெற்றி அடைவது எப்படி? என்று சொல்லித்தருகிறோம்.
இன்று இந்து மதத்தில் சில போலி சாமியார்கள் தோன்றி விட்டார்கள். இன்று இந்துமதத்தில் சில மூடநம்பிக்கைகள் மிகவும் வேருன்றி விட்டன.
இது போன்ற போலி சாமியார்களின் காலில் போய் விழாமல் அறிவியல் ரீதியாக வெற்றி காண்பது எப்படி இன்று சொல்லித் தருகிறோம்.

இதை மேலும் விளக்க இயலுமா?
உதாரணத்திற்கு, ஒரு தொழிலில் ஒரு பிரச்சனை வருவதாக வைத்துக் கொள்வோம் அந்த தொழில் அதிபர் செய்யவேண்டியது என்ன?
அதை அறிவியல் பூர்வமாக அணுகி, தகுந்த தீர்வு காண வேண்டும், ஆனால் இந்த போலி சாமியார்கள் என்ன செய்கிறார்கள்?
அந்த தொழிலதிபர்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எப்படி? பரிகாரம் என்ற பெயரில் தேவையில்லாத மூடநம்பிக்கைகளை வியாபாரிகள் மேல் திணிக்கிறார்கள்.

உதரணத்திற்கு, தொழிலதிபர் ஒரு யாகம் செய்ய வேண்டும், ஆடு, மாடு பலி கொடுக்க வேண்டும் என்பது போன்ற தேவையில்லாத பூஜைகளை சடங்குகளை உருவாக்கி விடுகிறார்கள்.
இதனால் தொழிலதிபரின் நேர விரயம் இரட்டிப்பாக மாறுகிறது. ஏற்கனவே தொழிற்சாலையில் பிரச்சனைகள் பற்றி எரிகின்றன.
இதில் தேவையில்லாத யாகம், பூஜை, என அதிக சடங்குகள், செலவுகள் வேறு இன்று புவி வெப்பமாதல் நேரத்தில் மழை வேண்டி யாகங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை மழை வேண்டினால் அதிக மரகன்றுகள் நடவேண்டிய அவசியம் இல்லை, மழை வேண்டினால் அதிக மரக்கன்றுகள் நட வேண்டும் இருக்கும் மரங்களுக்கு அதிக நீர் ஊற்ற வேண்டும்.
ஆகவே தொழில் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாக, அறிவுபூர்வமாக அணுகி, சிறந்த தீர்வுகள் காண வழி வகுக்கிறோம்.

ஒரு தொழில் வெற்றியின் ரகசியம் என்ன?

ஒரு தொழில் வெற்றிபெற பல விஷயங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு வெற்றி ஒரு நாளில் கிடைப்பது கிடையாது. நம்பிக்கை, நாணயம், உத்திரவாதம் என மூன்றுமே ஒரு தொழிலின் வெற்றிக்கு அடிப்படை தேவை, ஒரு தொழிலதிபர் தன் தொழில் வெற்றிபெற மிகவும் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தரமான சேவைகளை வழங்க வேண்டும்.

ஒரு தொழில் வளர்ச்சிக்கு தரமே தாரக மந்திரம், ஒரு தொழிலதிபர் உற்பத்தி செய்யும் பொருட்களில் தரக்குறைவு இருக்ககூடது. சுத்தம் சோறு போடும், சுத்தமான பொருட்களை மக்கள் நம்பி வாங்குவார்கள்.